Thursday, October 22, 2015

கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார் வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு
பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரி யாக வேலை செய்யாவிட்டால், மாற் றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள். சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினா ரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கி றார். உடனே, ‘லாப்_டாப் வாங் கிய நிறுவனத்தைக் கேட்ட தில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக் கில்’ செருக வில்லை. அத னால் அது எங்கள் தவறு இல் லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்து விட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியார ண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற வுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்க வில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடி விட்டார்கள் பாருங்கள்!

Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: