Thursday, October 22, 2015

யூ-டியூப் வீடியோவை டவுன்லோடு செய்ய..

யூ-டியூபில் எந்த வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்து அதன் முகவரியை காப்பி (Ctrl + C) செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு யூ-டியூபில் Compcare Pathuga Pattabishegam என்ற தலைப்பிலான வீடியோவை இயக்கிக்கொள்வோம்.

இதன் முகவரியை (https://www.youtube.com/watch?v=53lUWv8cEKY) காப்பி செய்துள்ளோம்.
இப்போது பிரவுசரில் புதிய டேபில், இந்த லிங்கை பேஸ்ட்(Ctrl+V) செய்து கொண்டு youtube என்ற வார்த்தைக்கு முன் SS என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். https://www.ssyoutube.com/watch?v=T0bXMIbh0sg)
இப்போது Savefrom.net என்ற தலைப்பிலான திரையில் நாம் பேஸ்ட் செய்த லிங்கின் பெயர் வெளிப்படும். இதில் Download என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த பட்டனுக்கு அருகில் உள்ள பாக்ஸை கிளிக் செய்தால் ஏராளமான வீடியோ ஃபைல் ஃபார்மேட்டுகள் வெளிப்படும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்து டவுன்லோட் செய்யலாம். எந்த ஃபைல் ஃபார்மேட்டையும் செலெக்ட் செய்யாமல் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால், முதலாவதாக உள்ள MP4 என்ற ஃபார்மேட்டில் வீடியோ டவுன்லோட் ஆகும்.
உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த வீடியோ நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகி விடும். வீடியோவில் சைஸிற்கு ஏற்ப டவுன்லோடு ஆகும் நேரமும் வேறுபடும். நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆனவுடன் அதை வழக்கம்போல கிளிக் செய்து இயக்கிப் பார்க்கலாம்.
குறிப்பு: இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யும் வீடியோக்களை நம் பெர்சனல் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தலாம். அவற்றை நம் பிசினஸுக்காகவோ, நம்முடைய வேறேதேனும் படைப்பின் இடையே இணைத்தோ கமர்ஷியலாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மீறினால் அந்த படைப்பின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
இன்டர்நெட் பயணத்தில் நம் செய்கைகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். பிறர் படைப்புகளை பார்த்தும், கேட்டும், படித்தும் பயன் அடைவதோடு நிறுத்திக்கொண்டால்தான் நம் பயணம் இனிமையாக அமையும்.

Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: