Wednesday, October 21, 2015

என் மரியாதைக்குரிய மனிதர்


"என் மரியாதைக்குரிய மனிதர்!' 

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்...

என்னுடன் சேர்த்து, குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைகள். நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியில் இருந்தார். பின், கேரள போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தார்.எங்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். படிப்பில், பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். 


அதனால் தான், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில், முதல் மாணவன் என்ற பெருமையுடன் வெளியேவந்தேன்.ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் நான் சுமாரான மாணவனாக, சக மாணவர்களுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பில், சதானந்தவள்ளி ஆசிரியையின் கண்டிப்பு தான், என்னை சிறந்த மாணவனாக உருமாற்றியது.ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியராக வந்த ராமசாமி சார், என் வாழ்வில் மறக்க முடியாத மரியாதைக்குரிய மனிதர். 

என் ஆங்கிலப் புலமையைப் பார்த்து, என்னை என்.சி.சி.,யில் சேர்த்துக் கொண்டார். அங்கு, என் ஈடுபாட்டைப் பார்த்து, 100 மாணவர்களுக்கு தலைவராக, பொறுப்பான பதவி கொடுத்தார்.போலீஸ் துறை மீது ஈடுபாடு வருவதற்கு, அவர் தான்முக்கிய காரணம். 

ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதை, என் அப்பாவிற்குக் கூட தெரிவிக்காமல், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் சந்திக்கச் சென்றது, ராமசாமி சாரை தான்.ஆனால், அவர் உயிருடன் இல்லை. உள்ளுக்குள் அழுதபடியே, அவர் படத்தின் முன் நின்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். என்னை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்காம லேயே, அவர் மறைந்து விட்டார் என்ற வருத்தம், இன்றும் என் மனதில் பெரும் குறையாக உள்ளது.

Meta Tags :
தலைப்பு செய்திகள்,தமிழகம், இந்தியா, உலகம், கல்வி, மருத்துவம், அரசியல்,அறிவியல், சினிமா, பொது அறிவு, ஆடியோ,வீடியோ, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்,விளையாட்டு, நேர்காணல், இலக்கியம், வேலைவாய்ப்பு, இ.புத்தகம், இணைய தளங்கள், தொழில்நுட்ப புரட்சி, மொபைல் தொழில்நுட்பம், புள்ளி விவரம், அரசாணைகள், விண்ணப்பங்கள், டவுன்லோட் , தேர்வுகள், தேர்வு முடிவுகள், அரசு செய்திகள், ஸ்டடி மெட்டிரியல்ஸ் டவுன்லோட், ஒரிஜினல் வினாத்தாட்கள், பாட திட்டங்கள்,

No comments: